நாளை ஐபிஎல் மினி ஏலம் – அணிகள் வைத்திருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா??

0

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை சென்னையில் வைத்து நடைபெறவுள்ளது. தற்போது போட்டியில் பங்குபெறும் 8 அணிகள் கையில் எவ்வளவு தொகை வைத்துள்ளார்கள் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல்:

ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் இந்த ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும். இந்த தொடரில் விளையாடுவதற்கு உலக வீரர்களும் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். காரணம் இதில் அதிக சம்பளம், மேலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதற்காகவே உலக நாடு வீரர்கள் இதில் அதிகமாக கலந்து கொண்டு விளையாடி வருவார்கள். தற்போது இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கான மினி ஏலம் நாளை சென்னையில் வைத்து நடைபெற உள்ளது. இந்த ஏலம் நாளை மாலை 3 மணிக்கு துவங்குகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அணிகள் கையில் வைத்திருக்கும் இருப்பு தொகை:

மும்பை இந்தியன்ஸ்:

ஏலத்தில் 7 வீரர்களை எடுக்கலாம். அதில் 4 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். கைவசம் ரூ.15.35 கோடி வைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஏலத்தில் 6 வீரர்களை எடுக்கலாம். அதில் 1 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். கைவசம் ரூ.19.90 கோடி வைத்துள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ்:

ஏலத்தில் 8 வீரர்களை எடுக்கலாம். அதில் 3 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். கைவசம் ரூ.13.4 கோடி வைத்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்:

ஏலத்தில் 9 வீரர்களை எடுக்கலாம். அதில் 5 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். கைவசம் ரூ.53.20 கோடி வைத்துள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு கேக் கட் செய்து கொண்டாடிய ‘டான்’ படக்குழு – வைரலாகும் புகைப்படம்!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஏலத்தில் 8 வீரர்களை எடுக்கலாம். அதில் 2 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். கைவசம் ரூ.10.75 கோடி வைத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஏலத்தில் 9 வீரர்களை எடுக்கலாம். அதில் 3 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். கைவசம் ரூ.37.85 கோடி வைத்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஏலத்தில் 11 வீரர்களை எடுக்கலாம். அதில் 3 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். கைவசம் ரூ.35.40 கோடி வைத்துள்ளது.

சன்ரைஸ்ஸ் ஐதராபாத்:

ஏலத்தில் 3 வீரர்களை எடுக்கலாம். அதில் 1 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். கைவசம் ரூ.10.75 கோடி வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here