‘நான் என் திருமணம் குறித்து மறைத்ததற்கு இது தான் காரணம்’ – VJ ரக்சன் ஓபன் டாக்!!

0

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ரக்சன் தனது திருமணம் குறித்து மறைத்ததற்கான காரணத்தை வெளியிட்டு, தனது மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொகுப்பாளர் ரக்சன் திருமணம்

29 வயதான பிரபல தொகுப்பாளர் ரக்சன் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு சமூகவலைதளங்களில் அதிகமான பெண் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் வெளியான ‘குக் வித் கோமாளி’ காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியில் ரக்சன் தனது காதல் மற்றும் திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து அவரது மனைவி பெயர் சரண்யா என்றும் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் தனியார் சேனலில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். இவ்வளவு காலம் திருமணமானதை ஏன் மறைத்துள்ளார் என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், அவரது மனைவிக்கு சமூகவலைதளங்களில் புகைப்படத்தை பதிவிடுவதில் விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் – நாளை பதவியேற்பு!!

தொடர்ந்து அவர் தனது மனைவியுடன் 10 ஆண்டுகளுக்கு முன்பாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு தகவலையும் ஷேர் செய்துள்ளார். அந்த பதிவில், தினமும் ஸ்டேட்டஸில் எப்படி காதலிக்கிறோம் என்று சொல்வதை விட, எப்படி காதலித்தோம் என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்ததே உண்மையான காதலின் வெற்றி என பதிவிட்டுள்ளார்.

மேலும் மனைவியைப் பற்றி இதுவரை எந்த தகவலும் கூறாமல் ரகசியமாக வைத்தது ஏன் என கேட்கப்பட்ட கேள்விக்கு, நீங்கள் யாரும் எனக்கு திருமணம் ஆகிவிட்டதா? என கேட்டதில்லை நானும் சொன்னதில்லை. நானும் தொகுப்பாளினி ஜாக்குலினும் ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் எனது மனைவி என்னுடன் தான் இருப்பார். யாரும் அவரைப்பற்றி எதுவும் கேட்டதில்லை என கூறியுள்ளார் ரக்சன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here