பழைய கொழுக் மொழுக் உடலமைப்பிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ் – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0
keerthi suresh

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வருபவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் கீர்த்தி தற்போதெல்லாம் போட்டோஷூட் நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ்

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது திரையுலகையே கலக்கிக்கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தனது சிறு வயதிலேயே தனது நடிப்பு திறனால் பலர் நெஞ்சங்களை கொள்ளைக்கொண்டவர். தமிழில் வர நாயகியாக ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த படம் அவருக்கு அந்த அளவிற்கு புகழை பெற்று தரவில்லை. படமும் அவ்வளவாக ஓடவும் இல்லை. அதன் பிறகு சிவா கார்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன் படம் டாப் ஹிட். இதில் கீர்த்தி சுரேஷின் அழகும், பாவனையும் சொல்லவே வேண்டாம்.

பல ரசிகர்கள் நெஞ்சங்களை கட்டி போட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் கிடைத்தனர். தெலுங்கு, மலையாளம் என பிசியாக ஆரம்பித்தார். இவரது சம்பளமும் எகிறியது. முன்னணி நடிகைகளே பொறாமைப்படும் அளவிற்கு இவரின் வளர்ச்சி இருந்தது.

சிவகார்த்திகேயனுக்கு கேக் கட் செய்து கொண்டாடிய ‘டான்’ படக்குழு – வைரலாகும் புகைப்படம்!!

சினிமா துறையில் கால் பதித்த குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். மேலும் விஜய் உடன் நடித்த ‘பைரவா’ திரைப்படமும் மாஸ் ஹிட். அதன் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. ஆனாலும் சில நெட்டிசன்கள் அவரை கலாய்க்கவும் ஆரம்பித்தனர்.

அவரது நடிப்பையும் ரியாக்ஷனையும் வைத்து சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இதனாலேயே கீர்த்தி தனது தாயிடம் நடித்து காட்டி விட்டு தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவாராம். மேலும் கீர்த்தி சுரேஷை ரசிகர்களுக்கு பிடித்ததற்கு காரணமே அவரின் கொழுக் மொழுக் உடலமைப்பு தான்.

keerthi suresh

ஆனால் திடீரென உடல் இளைத்து வந்து நின்ற கீர்த்தியை பார்த்த பலரும் ஷாக்காகி நின்றனர். இதனால் அவருக்கு படவாய்ப்புகளும் குறைந்தது. தற்போது தனது பழைய உடலுக்கு திரும்பியுள்ளார் கீர்த்தி. கொஞ்சம் கொஞ்சமாக தனது உடல் எடையை கூட்டி வருகிறார். தற்போது அண்ணாத்த மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இத்தனை நாட்கள் எந்த சர்ச்சையிலும் சிக்காத கீர்த்தி தற்போது அனிருத்துடன் காதல் வயப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அதற்கு அவரது அப்பாவும் தக்க பதிலடி கொடுத்து வந்தார். தற்போது கீர்த்தி தனது வலைப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here