வீடு கட்ட சிறுகசிறுக சேர்த்த 5 லட்ச ரூபாய் – கரையான் அரித்துச் சென்ற பரிதாபம்! சோகத்தில் குடும்பம்!!

0

ஆந்திர மாநிலத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் சொந்த வீடு கட்டுவதற்காக பணத்தை இரும்பு பெட்டியில் சேமித்து வைத்தனர். தற்போது அந்த பணத்தை கரையான் அரித்துள்ளது. இதனால் தற்போது அந்த குடும்ப சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

ஆந்திரா:

தற்போதைய காலத்தில் நடுத்தர மக்களின் அதிகபட்ச கனவு எது என்றால் அது சொந்த வீடு தான். இதனை கட்டுவதற்கு ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரும் அவதிப்பட்டு பணத்தை சேமித்து வருவார்கள். சிலர் வங்கியில் கடன் பெற்று வீட்டை கட்டி, வங்கியின் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருப்பார்கள். இதுபோல் சோகம் தொடர்ந்து நீடித்து தான் வருகிறது. தற்போது ஆந்திரா மாநிலத்தில் புதுவிதமான ஓர் அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆந்திரா மாநிலம் கிருஷ்ண மாவட்டம் அருகே உள்ள மைலவரம் பகுதியை சேந்தவர் தான் ஜமாலியா. இவர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு தனக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஓர் ஆசை. அதற்காக அவர் பன்றி மேய்த்து வரும் காசை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தார். மேலும் பணத்தை ஒரு இரும்பு பெட்டியில் சேர்த்து வந்தார், நீண்ட காலமாக அந்த பெட்டியை அவர் திறந்து கூட பார்த்ததில்லை.

#INDvsENG கடைசி 2 டெஸ்ட் – இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!!

தற்போது அந்த பெட்டியில் சுமார் ரூ.5 லட்சம் வரை பணம் சேர்ந்திருக்கும். அப்போது திடிரென்று அவர் அந்த பெட்டியை திறந்து பார்த்தார். அந்த பெட்டியில் உள்ள பணம் அனைத்தையும் கரையான் அரித்துள்ளது. இதனால் ஜமாலியா மற்றும் அவரது குடும்பம் மிகவும் மனம் நொந்து போகினர். தற்போது இந்த பணத்தை மாற்றுவதற்கு அரசு உதவ வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here