சிவகார்த்திகேயனுக்கு கேக் கட் செய்து கொண்டாடிய ‘டான்’ படக்குழு – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திக்கேயனின் 36வது பிறந்தநாள் இன்று(பிப்ரவரி 17). தற்போது நடந்துகொண்டிருக்கும் ‘டான்’ திரைப்பட படப்பிடிப்பில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திக்கேயன்

விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் நடிகர் சிவகார்த்திக்கேயன். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திக்கேயன். கடந்த 2012ம் ஆண்டு வெளியான ‘மெரினா’ என்ற முதல் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘மனம் கொத்திப்பறவை’, ‘எதிர் நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ ஆகிய நகைச்சுவை படங்களில் நடித்து மக்கள் மனதில் ஒரு கதாநாயகனாக உயர்ந்து வந்தார். இந்த வகையில் அவர் நடித்த எல்லா திரைப்படங்களும் அவருக்கு பெரிய வெற்றியை தேடித்தந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு கூட்டம் ரசிகர்களை சம்பாதித்தார் சிவகார்த்திக்கேயன்.

ட்விட்டர் தளத்தில் புதிய அப்டேட் – இந்தியாவில் தொடங்கும் சோதனை!!

தொடர்ந்து ‘ரஜினிமுருகன்’, ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நயன்தாரா உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளுடன் நடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திக்கேயன். தற்போது வித்தியாசமான கதைகளைத் தேடி நடித்து வரும் சிவகார்த்திக்கேயன் கைவசம் நிறைய படங்கள் உள்ளது. ‘அயலான்’ மற்றும் ‘டாக்டர்’ திரைப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

தொடர்ந்து ‘டான்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் சிவகார்த்திக்கேயன் பிலிம் ப்ரோடக்ஷன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தொடர்ந்து சினிமாவில் பாடல்களை பாடியும் சில படங்களுக்கு பாடல்கள் எழுதியும் வருகிறார் சிவகார்த்திக்கேயன். தற்போது ‘டான்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகர் சிவகார்த்திக்கேயன் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here