பஞ்சாப் மாநில உள்ளாட்சி தேர்தல் முடிவு – முன்னிலையில் காங்கிரஸ் கட்சி!!

0

பஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

முன்னிலையில் காங்கிரஸ் கட்சி

பஞ்சாபில் வெளிவந்த உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 7 மாநகராட்சிகளை வென்று முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து பல மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. வேளாண் சட்டங்களில் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக பாஜக கட்சி பின்னிலை வகிக்கிறது. அபோஹர், பதிந்தா, கபூர்தலா, மோகா, படாலா, ஹோஷியார்பூர் ஆகிய 7 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி ஜெயித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து மொஹாலி மாநகராட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி அந்த பகுதியில் மீண்டுமாக வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மாநகரட்சிகளைத் தவிர 109 நகராட்சிகள் மற்றும் 117 உள்ளாட்சி அமைப்புகளுக்காக நடந்த தேர்தலில், முக்கிய போட்டியாக காங்கிரஸ் கட்சியும், பஞ்சாப் மாநிலத்தின் எதிர்க் கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் களம் கண்டன. வேளாண் சட்டம் தொடர்பாக பஜாக விடமிருந்து பிரிந்த சிரோமணி அகாலிதளம் என்ற கட்சி தேர்தலில் தனியாக போட்டியிட்டது.

வீடு கட்ட சிறுகசிறுக சேர்த்த 5 லட்ச ரூபாய் – கரையான் அரித்துச் சென்ற பரிதாபம்! சோகத்தில் குடும்பம்!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 2,302 வார்டுகளுக்கு, 2,847 சுயேட்சைகள் உட்பட 9,222 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ் கட்சியில் 2,037 வேட்பாளர்களும், சிரோமணி அகாலிதளம் கட்சியில் 1,569 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சியில் 1,606 வேட்பாளர்களும், பாஜக கட்சியில் 1003 வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் கட்சியில் 106 வேட்பாளர்களும் இடம் பெற்றனர். பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருவதும், அடுத்த ஆண்டின் துவக்கத்தில் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here