இட்லி, தோசைக்கு இனி இந்த தக்காளி குருமா தான்., சமைத்து பாருங்க சுவைக்கு பஞ்சமே இருக்காது!!

0
இட்லி, தோசைக்கு இனி இந்த தக்காளி குருமா தான்., சமைத்து பாருங்க சுவைக்கு பஞ்சமே இருக்காது!!
இட்லி, தோசைக்கு இனி இந்த தக்காளி குருமா தான்., சமைத்து பாருங்க சுவைக்கு பஞ்சமே இருக்காது!!

பொதுவாக தக்காளியை வைத்து இட்லி, தோசைக்கு கார சட்னி தான் சமைத்த இப்போம். ஆனால் தற்போது தக்காளியை வைத்து சுவையான குருமா சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. இந்த ரெசிபியை சமைக்க ஒரு 30 நிமிடங்கள் மட்டுமே போதுமானது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்;

  • தேங்காய் – 1 கப்
  • கசகசா – 1 டீஸ்பூன்
  • சோம்பு -1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3
  • இஞ்சி – சிறிய துண்டு
  • பூண்டு – 4
  • மஞ்சள் தூள் – 1/ 2 டீஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தக்காளி – 4
  • வெங்காயம் – 1
  • கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை விளக்கம்;

இந்த தக்காளி குருமா ரெசிபி தயாரிப்பதற்கு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், கசகசா, சோம்பு இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதன் பிறகு ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு கொள்ளவும்.மேலும் அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு இதில் சிறிய துண்டுகளாக நறுக்கிய தக்காளியை சேர்த்து கொள்ளவும். மேலும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்னர் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை அதில் ஊற்றி கொள்ளவும்.

நொடிக்கு நொடி மாறும் வானிலை.., தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்!!!!

மேலும் அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மூடிக்கொள்ளவும். இதன் பின் ஒரு 20 நிமிடங்கள் கழித்து சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தக்காளி குருமாவில் மேல் தூவி விட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது நமக்கு சுவையான தக்காளி குருமா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here