#INDvsAUS சிட்னி டெஸ்ட் – போராடி டிரா செய்த இந்திய அணி!!

0

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியின் விஹாரி மற்றும் அஸ்வின் போராடி டிரா செய்துள்ளனர். மூன்றாவது போட்டியின் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி தற்போது டெஸ்ட் தொடர்களை விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்தனர். மூன்றாவது போட்டி சிட்னியில் வைத்து கடந்த 7ம் தேதி துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களை குவித்தது. ஸ்மித் இந்த போட்டியில் தனது 27 வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணி கில் மற்றும் புஜாரா அரைசதத்தை பதிவு செய்துள்ளனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் தந்துள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் அருமையாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்ஸை போலவே ஸ்மித் இதில் சிறப்பாக செயல்பட்டார். இவர் 81 ரன்கள் மற்றும் க்ரீன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 2 வது இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 312 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது.

பொங்கலை முன்னிட்டு சென்னையில் 24 மணிநேரமும் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அறிவிப்பு!!

பின்பு தனது 2 வது இன்னிங்ஸை துவக்கிய இந்தியா அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வந்தது. துவக்க ஆட்டக்காரர் ரோஹித் அரை சதம் அடித்து அசத்தினார். அதன் பின்பு புஜாரா மற்றும் பாண்ட் சிறப்பாக விளையாடி வந்தனர். நூலிழையில் பாண்ட் தனது சதத்தை தவறவிட்டார். இவர் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். புஜாரா 77 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தார். அதன் பிறகு களம் வந்த விஹாரி மற்றும் அஸ்வின் டெஸ்ட் தொடருக்கு ஏற்றது போல் தனது ஆட்டத்தை விளையாடினர். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா அணியின் பொறுமையை அருமையாக சோதித்தார். குறிப்பாக விஹார் 100 பந்துகளை சந்தித்து வெறும் 6 ரன்களே எடுத்தார். முடிவில் விஹாரி 161 பந்துகளை சந்தித்து 23 ரன்களும் அஸ்வின் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்களும் எடுத்த நிலையில் 5ம்நாள் முடிவில் போட்டி டிரா ஆகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here