‘அரசியலுக்கு வர சொல்லி வற்புறுத்த வேண்டாம்’ – ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ரஜினி!!

0
tweet

என்னை அரசியலுக்கு வர சொல்லி யார் வற்புறுத்தினாலும் நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் யாரும் அரசியலுக்கு வர சொல்லி என்னை வற்புறுத்த வேண்டாம் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

ரஜினி வேண்டுகோள்

நடிகர் கமல் ஒரு புதிய கட்சியை ஆரம்பித்ததை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தானும் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால் திடீரென ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் தனது அரசியல் பயணத்தை தொடர்வதில்லை என கடந்த டிசம்பர் 29 அன்று அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து நிர்பந்தித்து வருவதால் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ” நான் அரசியலுக்கு வராதது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று ரஜினி மக்கள் மன்ற பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து கொண்டு, சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

தொடர்ச்சியாக சரிவை காணும் தங்கத்தின் விலை – நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கட்டுப்பாட்டுடனும் கன்னியத்துடனும் அந்த நிகழ்ச்சியை நடத்தியதற்கு பாராட்டுக்கள். ஆனால் தலைமையின் உத்தரவை மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. தலைமையின் உத்தரவை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத ரசிகர் மன்றத்தினருக்கு நன்றி. நான் அரசியலுக்கு வர இயலாத காரணத்தை ஏற்கனவே கூறிவிட்டேன். நான் அரசியலுக்கு வரவில்லை. நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவுசெய்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்லி இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி யாரும் என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here