தொடர்ச்சியாக சரிவை காணும் தங்கத்தின் விலை – நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!!

0

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. இது பண்டிகை காலம் என்பதால் மக்கள் நகை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்.

தங்கம்:

கடந்த ஆண்டு கொரோனா காலங்களில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலையை லண்டனில் இருக்கும் உலோக சந்தை நிர்ணயம் செய்து வருகிறது. ஹெச்.எஸ்.பி.சி பேங்க் ஆஃப் சைனா உள்ளிட்ட 15 வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுரங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் சேர்ந்து உலக சந்தியில் தங்கத்தின் தேவைக்கேற்ப விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்த வந்தது.

இதனால் நகை வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டி வந்தனர். மேலும் சுபநிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது மக்கள் யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. இது பண்டிகை காலம் என்பதால் மக்கள் அனைவரும் நகை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் என்றே சொல்லலாம். கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் ரூ.1500 வரை தங்கத்தின் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் இன்றைய நிலவரம்:

தற்போது சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது. மேலும் 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ.37,296ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.38 குறைந்துள்ளது. மேலும் 1 கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,662ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையில் இன்றைய நிலவரப்படி வெள்ளி 1 கிராம் ரூ.68.10ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.68,100ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here