முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி – தமிழகத்தில் பணிகள் தீவிரம்!!

0
Close-up medical syringe with a vaccine.

தமிழகத்தில் முதற்கட்டமாக சுமார் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் வரும் 16ம் தேதி அன்று கொரோனா தடுப்பூசியை வழங்குவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்திற்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வந்தடையும் என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்தே கொரோனா என்னும் வைரஸ் பரவி மக்களை துன்புறுத்தி வருகிறது. இதற்காக தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக மருத்துவர்கள் அனைவரும் பகல் இரவு பாராமல் உழைத்து வந்தனர். மேலும் வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை இங்கு தயாரிக்கவும் ஆராய்ச்சி செய்து வந்தனர். தமிழகத்தில் மட்டும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரை இழந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமீபத்தில் அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசி வரும் வாரங்களில் வெளி வரும் என்று தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்காக அனைத்து மாநிலங்களிலும் பயிற்சி முகாம்கள் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்தியாவில் முதற்கட்டமாக சுமார் 3 கோடி மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் உடல் நல பாதிக்கப்பட்ட சுமார் 27 கோடி பேர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசியை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

‘வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும்’ – சிஏஐடி கோரிக்கை!!

corona vaccine
corona vaccine

மேலும் தமிழகத்தை பொறுத்தவரை முதற்கட்டமாக சுமார் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் விரைவில் புனேவில் இருந்து தமிழகத்திற்கு தடுப்பூசி வரும் என்று தெரிவித்துள்ளனர். வரும் 16ம் தேதி அன்று தடுப்பூசி போடும் பணி துவங்கவுள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் சென்னை அல்லது மதுரையில் வைத்து தொடங்க போவதாக தெரிகிறது. மேலும் சென்னையில் இருந்து அனைத்து மண்டலங்களுக்கு தடுப்பூசியை கொண்டு செல்வதற்கு குளிர் சாதன வண்டிகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் தமிழகத்தில் 226 மையங்களில் பயிற்சி முகாம்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here