‘வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும்’ – சிஏஐடி கோரிக்கை!!

0

வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் செயலிக்கு தடை கேட்டு அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது வாட்ஸ் அப் இல் வெளிவந்த புதிய அப்டேட்டுகள் பாதுகாப்பானவைகள் அல்ல என்ற கருத்தின் அடிப்படையில் அந்த செயலிகளுக்கு தடை கேட்டு சிஏஐடி வலியுறுத்தியுள்ளது.

வாட்ஸ் அப் செயலிக்கு தடை

தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் வாட்ஸ் அப் அப்டேட்டான தனிநபர் தகவல் கொள்கையை அமல்படுத்துவதில் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கும் அதன் தலைமை நிறுவனமான பேஸ் புக் நிறுவனத்திற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் அல்லது அந்த இரண்டு செயலிக்கும் தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி பேஸ்புக் ஆகும். பேஸ்புக் செயலிக்கு பின்பு தகவல் தொடர்பிற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ் அப். தற்போது இந்த இரு செயலிக்கும் தடை விதிக்க கோரி சிஏஐடி சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சிஏஐடி தரப்பிலிருந்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில், வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள், பண பரிவர்த்தனைகள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அந்த செயலியால் சேமித்து வைக்கவோ வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியும். வாட்ஸ் அப் அப்டேட் மூலமாக அந்த செயலியின் தலைமை நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்தால் ஒரு தனிநபரின் தகவல்களை எடுத்துக்கொள்ள முடியும். இது ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் அதன் பாதுகாப்பிற்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதனால் வாட்ஸ் ஆப்பில் வெளிவந்திருக்கும் தனிநபர் தகவல் கொள்கையை அமல்படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்க பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இக்கடிதம் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் சார்பில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரிடம் கேள்வி எழுப்பியபோது, புதிய தனிநபர் கொள்கை, மக்களின் வெளிப்படையான தன்மையை மேலும் அதிகரிக்க செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வாட்ஸ் ஆப் பயனாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் உரையாடுவதில் எந்த பாதிப்பும் இருக்காது. மேலும் வாட்ஸ் அப் தகவல் பகிர்வில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் கூறியுள்ளது.

நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அரசியலில் தொடர போகிறேன்’ – தமிழருவி மணியன் முடிவு!!

மேலும் இந்த செயலியை பயன்படுத்துவர்களுடைய எல்லா தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாப்பதில் வாட்ஸ் அப் நிறுவனம் உறுதியாக உள்ளது. வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் இந்த புதிய அப்டேட் செய்வதிற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என பதில் கூறப்பட்டது. மேலும் இந்த தகவல் தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியதற்கு அந்நிறுவனத்தின் சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பிடிஐ கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here