‘நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அரசியலில் தொடர போகிறேன்’ – தமிழருவி மணியன் முடிவு!!

0

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன் ரஜினி அரசியலில் இருந்து விலகிய உடன் தானும் சாகும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று அறிவித்திருந்தார். தற்போது மீண்டும் இவர் அரசியலை தொடர போவதாக அறிவித்துள்ளார். கோவையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார்.

தமிழருவி மணியன்:

ரஜினி தான் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்து ஓர் கட்சியை துவங்கினர். இந்த கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியனை நியமிதார். அதன் பிறகு ரஜினியின் அரசியல் கட்சிக்காக பல பணிகளை மேற்கொண்டார் தமிழருவி மணியன். திடிரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தன் உடல் நிலையை முன்னிறுத்தி ரஜினி அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்தார். இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. ரஜினியை தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழருவி மணியனும் தனது அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள போவதாக அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் கூறியதாவது,”அரசியலில் மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களுக்கும் யாருக்கும் வித்யாசம் தெரியவில்லை, இந்த சூழலில் நான் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறேன், தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி வர விரும்பினேன். இது தான் என் தவறு, அரசியலில் என் நேர்மைக்கும், உழைப்பிற்கும் பலனில்லை எனவே நான் தள்ளி நிற்பதே சிறந்தது, இறப்பு என்னை தழுவும் வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று ரஜினி அரசியல் இருந்து விலகிய தமிழருவி மணியன் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

பறவை காய்ச்சல் எதிரொலி – சரிவை சந்திக்கும் முட்டையின் விலை!!

இந்நிலையில் நேற்று கோவையில் உள்ள கவுண்டம்பாளையத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் 37 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மேலும் நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழருவி மணியன் மீண்டும் அரசியல் வாழ்க்கையை தொடர போவதாக அறிவித்துள்ளார். மேலும் அந்த கூட்டத்தில் பேசிய அவர் ரஜினி மக்கள் மன்றத்தில் காந்திய மக்கள் இயக்கத்தினை இணைக்க தீர்மானம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here