கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டு கொண்ட மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் – வைரலாகும் புகைப்படம்!!

0
Close-up medical syringe with a vaccine.

வயதானவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரகண்ட், மஹாராஷ்டிரா ஆளுநர்கள் உட்பட சில அமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதில் முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மார்ச் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனடிப்படையில் கடந்த 1ம் தேதி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இந்நிலையில் இன்று 2 மாநில ஆளுநர்கள்,1 மாநில முதல்வர், 2 மத்திய அமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதன்படி உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா டேராடூனில் உள்ள மருத்துவமனையிலும், மஹாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி மும்பை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – எடப்பாடியில் போட்டியிடும் முதல்வர்!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையிலும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புனேயிலுள்ள தீனநாத் மங்கேஸ்கர் மருத்துவமனையிலும், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பீகார் மாநிலம் பெகுசாரையில் உள்ள சதர் மருத்துவமனையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

முன்னதாக பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்சா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கமல்ஹாசன், முதல்வர் பிரனாயி விஜயன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here