‘வங்கிக்கணக்குகள், பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்படுகிறது’ – தேர்தல் அதிகாரி பேட்டி!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் வங்கிக்கணக்கு மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வரும் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் இதுவரை வாகன சோதனையில் இருந்து மட்டும் பணமாகவும், பரிசுப்பொருட்களாகவும் ரூ.15.20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக வங்கிக்கணக்கு பரிவர்த்தனையை கண்காணிக்க உள்ளனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, பணப்பட்டுவாடா மற்றும் வேட்பாளர்களின் செலவினங்களை கவனிக்க செலவின பார்வையாளர்கள் இரண்டு பேர் வரவுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – எடப்பாடியில் போட்டியிடும் முதல்வர்!

இவர்கள் வருகிற திங்கள் கிழமை தமிழகம் வரவுள்ளனர். மேலும் கூகுள் பே, போன் பே மூலம் பணப்பரிவர்த்தனை நடத்துவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஓர் குறிப்பிட்ட கணக்கில் இருந்து பல்வேறு கணக்கிற்கு பணம் மாற்றப்படும் கணக்குகள் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார். இதுபோன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எந்த வங்கிகளில் நடைபெறுகிறது என்பதை கண்காணித்து அதனை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here