இந்தியாவில் ஒரே நாளில் 2,003 பேர் பலி – விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா பாதிப்பு..!

0
Corona
Corona

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்த மாத இறுதியில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் புது உச்சத்தை அடைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்ஆர் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புது உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 10,974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 2,003 பேர் உயிரிழந்து உள்ளனர். இது கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்து உள்ளதை காட்டுகிறது. இந்தியாவில் இதுவரை 3,54,065 பேர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 11,903 பேர் உயிரிழந்து உள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Corona death
Corona death

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்தவர்கள் சதவீதம் அதிகமாக உள்ளது. இதுவரை 1,86,935 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 1,13,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, 5,537 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. இதுவரை 48,019 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 528 பேர் உயிரிழந்து உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 44,688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here