பிளஸ் 2 தேர்வு தவறவிட்டவர்களுக்கு மறு வாய்ப்பு – அரசு அறிவிப்பு..!

0
10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு -  மார்ச் 24ல் பொதுத் தேர்வு..கல்வித்துறை உத்தரவு!!
10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு -  மார்ச் 24ல் பொதுத் தேர்வு..கல்வித்துறை உத்தரவு!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வுகளை எழுதாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

மறு வாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்த பொழுது பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று கொண்டிருந்தன. இருப்பினும் தேர்வுகள் நிறுத்திவைக்கப்படாமல் நடந்தது. கடைசியாக நடைபெற வேண்டிய ஒரு பாடத்திற்கான தேர்வுகள் மற்றும் நடைபெறாமல் இருந்தது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Public Exam
Public Exam

இந்தியாவில் ஒரே நாளில் 2,003 பேர் பலி – விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா பாதிப்பு..!

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்த பொழுது போக்குவரத்து வசதி மற்றும் கொரோனா பயம் காரணமாக வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் ஆகிய தேர்வுகளை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு முடிந்தவுடன் இந்த பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. மறுதேர்வு எழுத உள்ள மாணவர்களின் விருப்ப கடிதத்தை வரும் 24ம் தேதிக்குள் பெறுமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here