ஹானர் நிறுவனத்தின் 9A ஸ்மார்ட்போன் வெளியீடு – ஜூன் 23 இல் யூடூப்பில் லைவ்..!

0
Honor 9a
Honor 9a

ஹானர் நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு மாடல் ஆன “ஹானர் 9ஏ”வை தனது அதிகார பூர்வ யூடூப்பில் லைவ் ஆக வெளியிட திட்டமிட்டு உள்ளது.

ஹானர் நிறுவனம்:

ஹானர் நிறுவனம் ஆண்ட்ராய்டு போன் விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் தனது விற்பனையை தொடங்கி உள்ளது. இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வண்ணம் அவ்வப்போது புது மாடல் போன்களை வெளியிடும். இந்நிலையில் வரும் ஜூன் 23 ஆம் தேதி இந்த நிறுவனம் தங்களது அதிகார பூர்வ யூடூப்பில் புதிய மாடல் ஆன ‘ஹானர் 9ஏ’ வெளியிட உள்ளது.

Honor 9a
Honor 9a

சிறப்பு அம்சங்கள்:

  • தண்ணீரில் விழுந்தாலும் பழுது அடையாத வகையில் வடிவமைக்க பட்டு உள்ளது.
  • பிங்கர் பிரிண்ட் வசதி செய்யபட்டு உள்ளது.
  • பின்புறத்தில் மூன்று கேமரா வசதி செய்ய பட்டு உள்ளது.

மேலும் இதன் சிறப்பு அம்சங்கள் வெளியிடபடவில்லை. ஏற்கனவே இவர்கள் வெளியிட்ட ‘9 எக்ஸ் ப்ரோ’ வில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதன் விலையும் இன்னும் வெளியிடபடவில்லை. விலை 17 ஆயிரத்திற்கு மேலாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

9 எக்ஸ் ப்ரோவில் இருக்கும் அம்சங்கள்:

6.59 புல் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம், 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ், மேலும் சில அம்சங்கள் வரவிருக்கும் புதிய போன் இல் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here