உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் – இந்திய அணி முன்னேற்றம்!!

0

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பிற்கான புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம் அடைந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

டெஸ்ட் போட்டியை ஊக்குவிக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இதனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை அதற்கான லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த லீக் போட்டிகளில் மொத்தம் 9 அணிகள் பங்கு பெற்றது. இதில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணி தான் இறுதி போட்டியில் விளையாடும். மேலும் இதனை புள்ளிகள் அடிப்படையில் தான் தேர்ந்தெடுப்பார்கள். அதாவது ஒவ்வொரு அணிகளும் குறைந்தபட்சம் மற்ற அணிகளுடன் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் மூன்று டெஸ்ட் தொடர் தனது சொந்த மண்ணில் விளையாட வேண்டும். மேலும் டெஸ்ட் தொடர்கள் அனைத்தும் இரண்டு போட்டி முதல் ஐந்து போட்டி வரை இருக்க வேண்டும். இதில் வெற்றி பெரும் அணிகளை பொறுத்து புள்ளிப் பட்டியலில் இடம் பிடிப்பர். இதில் முதலாவதாக நியூஸிலாந்து அணி அதிக புள்ளிகளை பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தற்போது இந்த அணியுடன் மோதும் மற்றொரு அணி யார்? என்பது தான் தெரியவில்லை. இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்தியாவில் உற்பத்தியை துவக்கும் ‘டெஸ்லா’?? எலான் மஸ்க் திட்டம்!!

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 69.7 சதவீதம் மற்றும் 460 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி 3-1, 2-1 என்ற கணக்கில் வென்றால் இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடும். அதேபோல் இங்கிலாந்து அணி இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடும். இந்த இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here