இந்தியாவில் 4 பேருக்கு தென் ஆப்பிரிக்க கொரோனா வைரஸ் தொற்று – சுகாதாரத்துறை தகவல்!!

0

இங்கிலாந்தைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேருக்கு பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க கொரோனா வைரஸ் தொற்று

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவியதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் வீதமும் குறைந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கேரளாவில் 61,500, மஹாராஷ்டிராவில் 37,383 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் 87,40,595 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான், சிக்கிம், கேரளா, மிசோரம், மத்திய பிரதேசம், ஒடிசா, திரிபுரா, பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரகண்ட்,லட்சத்தீவுகளில் 70% தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் லடாக், ஜார்கண்ட், உத்திர பிரதேசம், தெலுங்கானா, திரிபுரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 60% கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தியை துவக்கும் ‘டெஸ்லா’?? எலான் மஸ்க் திட்டம்!!

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்துள்ள நான்கு பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று தாக்கியுள்ளது. இங்கிலாந்தில் தோன்றிய புதியவகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 187 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தின் உருமாறிய வைரஸ் வகையிலிருந்து வேறுபட்டுள்ளது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here