இந்தியாவில் உற்பத்தியை துவக்கும் ‘டெஸ்லா’?? எலான் மஸ்க் திட்டம்!!

0

உலக பணக்காரர் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், தனது கார்களை இந்தியாவில் வைத்து தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்லா:

கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் அதிரடியாக உயர தொடங்கியது. இதன் காரணமாக உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தினார். மேலும் சில தினங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். தற்போது இது நடப்பது போல் தெரிகிறது. ஏனெனில் பெங்களுருவில் புதியதாக டெஸ்லா நிறுவனம் பொருளாதார சிறப்பு மண்டலத்தை அமைத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் வகையில் ஓர் திட்டத்தையும் அமைத்துள்ளனர். இதனை கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 5 மாநிலங்களில் தனது ஷோரூமை திறக்கவுள்ளது. மேலும் ரிசெர்ச் மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் உற்பத்தி கூடத்தை அமைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’ – தளபதி 66 அப்டேட்!!

இந்நிறுவனத்திற்கு வசதியாக ‘மேக் இன் இந்தியா’ திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்டுகிறது. மேலும் CKD ரூட்டில் டெஸ்லா நிறுவனத்தின் 3 மாடல் காரின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் வைத்து அசெம்பிள் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here