நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’ – தளபதி 66 அப்டேட்!!

0

நடிகர் விஜய் தற்போது நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தளபதியின் 66வது படத்திற்கான அப்டேட் தளபதிக்கு மிக நெருங்கிய நபரிடமிருந்து வந்துள்ளது.

தளபதியின் அடுத்த படத்தின் அப்டேட்

நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் எதிர்பாராத அளவிற்கு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் வசூல் மட்டும் 250 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்கான அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தளபதி நடிக்கும் 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த செய்தி அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தற்போது வந்த செய்தியின் படி நடிகர் விஜய் தன்னுடைய மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக நடிகர் விஜய் நடித்துள்ள ‘வில்லு’ என்ற படத்தில், ஒரு பாடலில் நடிகர் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் ஆடியிருப்பார். தொடர்ந்து கனடாவில் சினிமா தொடர்பான படிப்பில் ஈடுபட்டிருந்த அவர் கொரோனா ஊரடங்கில் சென்னை திரும்பினார்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா – பிப்ரவரி 18இல் துவக்கம்!!

படிக்கும் காலத்தில் குறும்படங்களை இயக்கி வந்த சஞ்சய் தற்போது நடிகர் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக விஜய்யின் மகள் திவ்யா ஷாஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளார் ஷாஷா.

 

மேலும் ஜேசன் சஞ்சய் ஒரு தெலுங்கு படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. விஜய் மகள் வெளியிட்ட இந்த தகவல் நிச்சயமாக தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here