கொரோனா பரவலால் மீண்டும் பொதுமுடக்கமா?? அச்சத்தில் மக்கள்!!

0

மும்பையில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக மறுபடியும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அந்நகர மேயர் “ஊரடங்கை அமல்படுத்துவது மக்கள் கையில் தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு:

கொரோனா பரவல் காலத்தில் நாட்டிலேயே பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலம் மஹாராஷ்டிரா தான். அதிலும் குறிப்பாக மும்பை நகரத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாகவே இருந்து வந்தது. பொதுமுடக்கம் முதலான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அங்கு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

பால் வியாபாரத்திற்காக ‘ஹெலிகாப்டர்’ வாங்கிய விவசாயி – மகாராஷ்டிராவில் வினோத சம்பவம்!!

இது பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய மும்பை நகரின் மேயர் கிஷோரி பட்நாகர் கூறும்போது, “மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை சரிவர கடைபிடிப்பதில்லை. மெட்ரோ ரயில் மாதிரியான பொது இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்வதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் மறுபடியும் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது என்பது மக்கள் கையில் தான் உள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 493 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here