Friday, May 17, 2024

வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு – இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு முடிவு!!

Must Read

வங்கி பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி உள்ளதாக இந்திய வங்கிகளின் கூட்டமைப்பான ஐபிஏ அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் 8 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகள்:

பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில தனியார் துறை வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் 15 சதவீதம் உயர்த்தப்படும் என்று இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதே போல் முதல் முறையாக பணியாளர்களின் செயல்திறன் அடிப்படையில் இன்சென்டிவ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ஊதிய உயர்வு நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளெர்க் மற்றும் சப் ஸ்டாப் ஆக பணிபுரிபவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடச்சலம் இது குறித்து கூறுகையில், “இந்த தொழில்துறை அளவிலான ஊதியத் திருத்தம் 29 வங்கிகளில் கொண்டுவரப்பட உள்ளன. இதன் மூலமாக, பொதுத்துறை வங்கிகளில் உள்ள 3.79 லட்சம் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் பணிபுரியும் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த ஊதிய உயர்வு பலனைப் பெறுவார்கள். இந்த புதிய ஊதிய திருத்தம் மூலமாக வங்கிகளுக்கு ஆண்டுக்கு 7,898 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

யு.எஃப்.பி.யு மற்றும் பி.கே.எஸ்.எம் (வங்கி கராம்சரி சேனா மகாசங்) ஆகிய வங்கிகளுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதில் பொது, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உட்பட சுமார் 37 வங்கிகள் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்திய இந்திய வங்கிகளின் கூட்டமைப்பை கட்டாயப்படுத்தியுள்ளன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக சுற்றுலா பயணிகளே., அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்திற்கு வராதீர்கள்? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், மலர் கண்காட்சி நடைபெறுவதாலும் அனுதினமும் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -