உள்ளாடை, கருத்தடை போன்ற ஆபாச விளம்பரங்களுக்கு தடை – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!!

0

தொலைக்காட்சியில் ஆபாசத்தை வெளிக்காட்டும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார். அவர் விடுத்த மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.

மனுத்தாக்கல்

சாகதேவராஜா என்பவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர். இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஆபாசத்தை வெளிப்படுத்தும் விளம்பரங்களை தடை செய்யக்கோரி மனுதாக்கல் செய்துள்ளார். ஆபாசத்தை வெளிப்படுத்தும் விளம்பரங்களான கருத்தடை சாதனம், உள்ளாடைகள் மற்றும் பாலியல் பிரச்சனை தொடர்பான மருந்துகள் போன்றவை தொடர்பான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வெளியாகின்றன. இதனால் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மேலும் வன்முறைக்கு ஆளாகுவது மட்டுமல்லாமல் வளரும் இளம் சந்ததியினர் குற்றவாளியாக மாறும் சூழல் அதிகமாக அமைய வாய்ப்பு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

madurai bench of madras high court
madurai bench of madras high court

திரைப்படங்களில் ஆபாச காட்சிகளை சென்சார் போடுவது போல் விளம்பரங்களிலும் சென்சார் வைத்து ஒளிபரப்ப வேண்டும். இது போன்ற விளம்பரங்கள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒளிபரப்ப விதி உள்ளது. ஆனால் அந்த விதியை பின்பற்றாமல் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற விளம்பரம் மற்றும் திரைப்படங்களில் ஆபாசப்படத்திற்கு சென்சார் காட்ட வேண்டும். அதனை பின்பற்றாத ஊடகம் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

இடைக்கால தடை

நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கபட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்தடை சாதனம், உள்ளாடைகள் என ஆபாசத்தை வெளிப்படுத்தும் விளம்பரங்களுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

banned
banned

மேலும் இது குறித்து பதிலளிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர், திரைப்பட தொழில்நுட்பம், தமிழக செய்தி மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here