ஹெல்த்தியான ‘கருப்பட்டி மைசூர் பாக்’ ரெசிபி – இதோ உங்களுக்காக!!

0

தீபாவளி பண்டிகை முன்னியிட்டு நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவீட்ஸ் தாங்க விரும்புவாங்க. அந்த சுவீட்ஸ் கடையில் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் பொருளைக் கொண்டு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் ‘கருப்பட்டி மைசூர் பாக்’ செய்வது எப்படினு தாங்க பார்க்கப்போறோம்.

பலன்கள்

  • கருப்பட்டி இரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். இது சருமத்தையும் பளபளப்பாக காட்டும்.
  • கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.
  • பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைக்கும்.
  • நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.

தேவையான பொருள்கள்

கடலை மாவு – 1 கப்

நெய் –

எண்ணெய் –

கருப்பட்டி – 2 கப்

பால் – 1 கப்

சமையல் சோடா – 1 சிறிது அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு சூடு செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு கடாயை சூடுபடுத்தி, அதில் கடலை மாவு சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை தீயவிடாமல் சிவக்க வறுத்து அதில் பச்சை வாசனை சென்ற உடன் அடுப்பை நிறுத்தி விட்டு அதில் சிறிது நெய் மற்றும் எண்ணெயை சேர்த்து கலந்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு கருப்பட்டி நன்கு கரைந்ததும் பாகு பதத்திற்கு வரும் வரை நன்றாக காய்ச்ச வேண்டும். பாகு பதம் வந்ததும் இதோடு நாம் தயாரித்து வைத்த மாவை சேர்த்து கலக்க வேண்டும். நன்றாக மாவு கலந்ததும் இப்பொழுது சூடாக வைத்துள்ள எண்ணெய், நெய் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்க வேண்டும். இப்பொழுது கலவை கெட்டியானதும் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி தேவையான அளவுகளில் துண்டுகளாக செய்து ருசிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here