Sunday, May 5, 2024

மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகும் இ பாஸ் நடைமுறை ஏன்??- மனித உரிமைகள் தமிழக அரசிடம்கேள்வி!!

Must Read

தமிழக அரசு பின்பற்றும் இ பாஸ் முறை மனித எதிரானது என்று மத்திய அரசின் விதிகளை மீறி இதனை ஏன் பின்பற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.

இ பாஸ் முறை:

தமிழகத்தில் நாம் அனைவரும் தற்போது 7 ஆம் கட்ட பொது முடக்கத்தில் உள்ளோம். தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை விடுத்தது தான் இந்த ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

ஆனால், மக்கள் ஒரு ஊரில் இருந்து இன்னோர் ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் இ பாஸ் பெற்று தான் செல்ல வேண்டும் என்று உத்தரவு உள்ளது. இது தனியார் வாகனங்களுக்கு கட்டாயம் என்றும் கூறியிருந்தது.

பல புகார்கள்:

ஆனால், இந்த இ பாஸ் நடைமுறையில் பல தில்லுமுல்லுகள் நடந்துள்ளது என்று புகார்கள் வந்த வண்ணமாக இருந்தது. இந்த நடைமுறையை பயன்படுத்தி பலரும் மக்களிடம் பணத்தை கொள்ளை அடித்து வந்தனர்.

emergency e pass model
emergency e pass model

3000 ரூபாயில் இ பாஸ் பெற்று தரப்படும் என்றும் 5 நிமிடத்தில் பெற்று திரைப்படம் என்று மக்களை ஏமாற்றி வந்தததால், இதனை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றையையும் இதற்கு எதிராக வெளியிட்டார்.

ஆனால், அண்மையில் முதல்வர் இந்த முறையை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

மனித உரிமைகள் ஆணையம் கேள்வி:

இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதனால், இந்த நடைமுறை குறித்து தமிழக அரசுக்கு ஆணையம் சார்பாக கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது. அது, ” மத்திய அரசு தான் அனுமதி வழங்கி விட்டதே, பின்பு எதற்காக இந்த நடைமுறையை இன்னும் பின்பற்ற வேண்டும் என்றும், இது மனித உரிமைகளுக்கு மீறலாகாதா?? ” என்று கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது.

human right commission of tn
human right commission of tn

இன்னும் நான்கு வார காலத்துக்குள் ஏன் தொடரப்படுகிறது என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -