231 மாணவர்கள் மரணம் – தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையால் சர்ச்சை!!

0
10 th exams results
10 th exams results

தமிழகத்தில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 5,248 மாணவர்களுக்கு மட்டும் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் அளித்துள்ள விளக்கம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அரசின் விளக்கம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கொண்டு 80 சதவீதமும், வருகைப் பதிவேட்டினை கொண்டு 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது. அதன்படி 9,45,077 மாணவ, மாணவிகளுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பதிவாகி இருந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 9,39,829 பேர் தேர்ச்சி என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் 9,45,077 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்து இருந்தனர். இதனால் மீதமுள்ள 5,248 மாணவர்களின் ரிசல்ட் குறித்து கேள்வி எழுந்தது. இது குறித்து தற்போது அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. விடுபட்ட தேர்வு முடிவுகள் உயிரிழப்பு, மாற்றுச் சான்றிதழ் பெற்றது மற்றும் இடைநிற்றல் காரணமாக வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தேர்வு முடிவு வெளியாகாதவர்களில் காலாண்டு, அரையாண்டு, தேர்வு எழுதாத பள்ளிக்கு முழுமையாக வராத 4,359 பேர், மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) பெற்று பள்ளியை விட்டு நின்ற 658 பேர் மற்றும் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து பின்பு உயிரிழந்த 231 பேர் என மொத்தம் 5,248 பேருக்கு முடிவுகள் வெளியிடப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகும் இ பாஸ் நடைமுறை ஏன்??- மனித உரிமைகள் தமிழக அரசிடம்கேள்வி!!

அரசு பொதுத்தேர்வு அறிவித்து அடுத்த சில மாதங்களுக்குள் 231 மாணவர்கள் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேர்வு அறிவிக்கப்பட்டு, முடிவுகள் வெளியாகும் வரை 231 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர் என்றால் மாதம் சராசரியாக குறைந்தது 20 மாணவர்கள் உயிரிழந்து உள்ளதாக அர்த்தம். இது எவ்வாறு சாத்தியம் என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here