ரவையை வைத்து அசத்தலான ஸ்வீட் – வீட்டில் செஞ்சு அசத்துங்க!!

0
rava sweet
rava sweet

இனிப்பு வகைகளை குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவர். குலோப் ஜாமுன், பால்கோவா, அல்வா போன்றவைகள் தான் கடைகளிலும் அதிகம் விற்கப்படும். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிமையாக ஸ்வீட்ஸ் செய்து விடலாம். அந்த வகையில் ரவையை வைத்து சூப்பரான ஸ்வீட் எப்படி செய்றதுன்னு பாப்போம் வாங்க.

தேவையான பொருட்கள்:

rava ingredients
rava ingredients

ரவை – 100 கி

சர்க்கரை – 1 கப்

நெய் – 50 கிராம்

பால் – 1 கப்

ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி

முந்திரி, பாதாம் – 10 கிராம்

செய்முறை:

முதலில் ஒரு அகலமான கடாயில் நெய் ஊற்றி அதில் ரவையை சேர்த்து வதக்கவும். அதன்பின் சிறிது பால் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். கெட்டி பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் இஞ்சி குழம்பு – இதோ உங்களுக்காக!!

rava gulab jamun
rava gulab jamun

அதன்பின் சர்க்கரையில் தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க வைத்து பாகு பதத்திற்கு செய்து கொள்ளவும். அதன்பின் நாம் பால் சேர்த்து செய்து வைத்த ரவை கலவையை உருண்டையாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

rava gulob jamun
rava gulob jamun

அதன்பின் சர்க்கரை பாகுவில் போட்டு பாதாம் மற்றும் முந்திரி தூவி 1 மணி நேரத்திற்கு பிறகு பரிமாறினால் சூப்பரான ரவா ஸ்வீட் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here