எல்லையில் காணாமல் போன 5 இந்திய இளைஞர்கள் – பத்திரமாக ஒப்படைத்த சீனா!!

0
Ladakh Border Issue
Ladakh Border Issue

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்கு அருகே காணாமல் போன 5 இளைஞர்களை, சீன ராணுவம் பத்திரமாக இன்று இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைத்து உள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியா – சீனா:

லடாக் எல்லைப் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பதற்றம், இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு சற்று தணிந்து உள்ளது. இதில் எல்லையில் ராணுவ வீரர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து 5 அம்ச திட்டமும் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று, அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து 5 இளைஞர்கள் காணாமல் போயினர். அவர்கள் இடம் குறித்து சீனாவிடம் இருந்து இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி உள்ள இடத்தில இளைஞர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐபிஎல் போட்டியில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன்கள் – விராட் கோஹ்லி தான் டாப்!!

அவர்கள் சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறின. இந்நிலையில் அந்த 5 இளைஞர்களையும் சீன ராணுவம் இன்று முறைப்படி பாதுகாப்பாக இந்திய வீரர்களிடம் ஒப்படைத்தது. அவர்கள் அனைவரும் 14 நாட்கள் கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட அமைதி பேச்சுவார்த்தையின் விளைவாகவே சீன ராணுவம் இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழி மாறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன நாட்டினருக்கு உணவு, ஆக்சிஜன் அளித்து சரியான பாதையில் இந்திய ராணுவம் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here