‘Potato Mutton Kabab’ – எப்படி செய்றதுன்னு பாப்போம்..!

0
enewz.in mutton kabab recipes in tamil
enewz.in mutton kabab recipes in tamil

தேவையான பொருட்கள்

மட்டன் கைமா – 1/4 கிலோ உருளைக்கிழங்கு – 2துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் பிரட் துண்டு –

2 மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லி – சிறிது கரம் மசாலா – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு முட்டை – 2 பிரட் தூள் – 1 கப் எண்ணெய் – 2 கப்

செய்முறை

முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் மட்டன் கைமாவை நீரில் நன்கு கழுவி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு பிரட் துண்டை நீரில் ஒருமுறை முக்கி எடுத்து, பிழிந்து, சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Mutton Cutlet Recipe - Lamb Cutlets - Yummy Tummy

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதப்பி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் கைமாவை சேர்த்து, உப்பு தூவி நன்கு கிளறி விட்டு, பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கைமாவை நன்கு வேக வைக்க வேண்டும்.

தேங்காய் பால் சாதம் இப்படி பண்ணி பாருங்க – சுவை அள்ளும்..!

பின் அதில் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, துருவிய தேங்காய், பிரட் துண்டுகள், கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

Mutton Shami Kabab Recipe | How To Make Shami Kabab Recipe

அதற்குள் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

Mutton Cutlet in Tamil-How to make mutton cutlet - YouTube

பின்னர் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கில் சிறிது எடுத்து உருண்டையாக்கி, தட்டையாக தட்டி அதன் நடுவே சிறிது மட்டன் கைமாவை வைத்து மூடி, முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப்போல் மீதமுள்ள மசித்த உருளைக்கிழங்கை செய்தால், உருளைக்கிழங்கு கைமா கபாப் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here