கட்சியை உடைக்கும் முயற்சியில் பாஜக – மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் குற்றசாட்டு

0

குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்தது அக்கட்சி இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூன்று எம்எல்ஏ கள் ஏற்கனவே ராஜினாமா செய்து உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

மாநிலங்களவை தேர்தல்:

குஜராத் இல் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்க்குக்கான இடம் காலியாக உள்ளது. இதற்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்வாணையம் திட்டமிட்டு உள்ளது. இத்தேர்தலுக்கு பாஜக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் சார்பில் இருவர் என 5 பேர் போட்டியிட உள்ளனர். பாஜக சார்பில் அபய் பரத்வாஜ், ரமிலா பாரா, நர்ஹாரி அமின் ஆகிய மூவரும், காங்கிரஸ் சார்பில் சக்திசின்ஹா கோகில், பரத்சின்ஹா சோலங்கி ஆகிய இருவரும் போட்டியிட உள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

குஜராத் சட்டப்பேரவை:

குஜராத் சட்டப்பேரவையில் உள்ள 182 உறுப்பினர்களில் ஆளும் கட்சியான பாஜக சார்பில்103 எம்எல்ஏகள் உள்ளனர், காங்கிரஸ் சார்பில் 68 எம்எல்ஏகள் உள்ளனர்.

காங்கிரசிற்கு நெருக்கடி:

இதனிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அக்சய் படேல், ஜிது சவுத்ரி இருவரும் புதன்கிழமை மாலையில் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியைச் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அக்கடிதத்தை சபாநாயகர் திரிவேதி ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். இதுவே காங்கிரஸிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் ராஜினாமா செய்தது காங்கிரஸிற்கு பெரும் நெருக்கட்டியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மோர்பி தொகுதி எம்எல்ஏ பிரிஜேஷ் மெர்ஜா தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார். இதனால் காங்கிரஸின் பலம் 65 ஆக குறைந்து உள்ளது

இது காங்கிரஸிற்கு பெரும் பலத்தை இழக்க செய்யும் செயல் ஆகும். இரு வேட்பாளர்களை நிறுத்தியுள்ள காங்கிரஸ் பலம் 65 ஆக உள்ளதால் ஒருவர் மட்டுமே ஜெயிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியை உடைக்கும் வேலையில் பாஜக ஈடுபடுகிறது என்று குற்றம் சாட்டி உள்ளது. இதனை பாஜக மறுத்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here