கமல்ஹாசனின் ‘நாமே தீர்வு’ – கொரோனவை விரட்ட தன்னார்வலர்கள் திட்டம்..!

0
naame theervu kamalahasan
naame theervu kamalahasan

கொரோனா நோயின் தாக்கம் உலகம் முழுவதும் இன்னும் குறையாமல் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. சென்னை மற்றும் தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் அடங்காமல் இருக்கின்றது.இதனை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நோயின் பரவல் குறைந்தவாறு இல்லை,எனவே இதை மக்களை வைத்துதான் கட்டுப்படுத்த முடியும் என்னும் எண்ணத்துடன்  ‘நாமே தீர்வு’ என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார் கமல்ஹாசன்.

நாடு திரும்பியோர்க்கு வேலை – மத்திய அரசு புதிய திட்டம்

உலக சுற்றுச் சூழல் தினம்

சினிமா நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இன்று (ஜூன் 5) உலக சுற்றுச் சூழல் தினமாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ‘நாமே தீர்வு’ என்ற தன்னார்வலர்கள் திட்டத்தை தொடங்கியுள்ளார் கமல்ஹாசன்.அதில்அவர் கூறியிருப்பது என்னெவென்றால் உலகத்தைப் பசுமையாக மாற்றப் பல வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும்‌ நாம்‌, இன்று நம்‌ சென்னையையும்‌ வேறு ஒரு பச்சைக்கு மாற்ற வேண்டியது இருக்கிறது.இது விமர்சனங்களுக்கான நேரம் இல்லை. இது சில்லறை அரசியலுக்கான நேரமும் இல்லை. நாளை என்ன நடக்கும், இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நேரம். கொரோனா வந்தால் மரணம் தான் என்ற எண்ணத்தை தூக்கி எறிவோம்.

சென்னையை மீட்டெடுக்கும்‌ ஒரு முயற்சி

சென்னை நமது மருத்துவ வசதிக்கான தலைநகரம். அதனை கொரோனாவுக்கான தலைநகராக நாம் மாற்றிடக்கூடாது. இதற்கான புதிய முயற்சிதான்  நாமே தீர்வு எனும் இயக்கம். இது நாம் அனைவரும் பங்கேற்கவேண்டிய இயக்கம். இனிவரும் சில வாரங்களுக்கு ஜாதி மத, இன மொழி , கட்சி பேதமின்றி ஒரு கோட்டில் இணைவோம். இந்த இயக்கத்தின் முதல் தொண்டன் நான். இன்னும் நிறைய தொண்டர்கள் தேவை. வாருங்கள் நாமே தீர்வாவோம்” என்று தெரிவித்துள்ளார். ”கூலித் தொழிலாளர்கள் தனது சொந்த மாகாணத்திற்கு கால்கடுக்க நடந்து, பசியால் சாவதை நாம் பார்த்து வருகிறோம். வீழ்ந்து கொண்டிருக்கும், பொருளாதாரம், அன்றாடங்காய்ச்சிகள் பசியால் மரணம், நமது அலட்சியம், இதெல்லாம் பார்க்கும் போது கோபம் கோபமாக வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

நாமே தீர்வு

என்னைப் போலப் பலரின்‌ கனவுகளை நனவாக்கிய சென்னையை மீட்டெடுக்கும்‌ ஒரு முயற்சி இது. உங்களின்‌ ஒத்துழைப்பும்‌, மக்களின்‌ பங்களிப்பும்‌ இருந்து விட்டால்‌ எந்த ஒரு விஷயத்திற்கும்‌ தீர்வு எளிதாகும்‌. இந்தச் சிக்கலான தருணத்திலும்‌ நாமே தீர்வு என்ற இந்த சிந்தனையின்‌ செயல்‌ தொடக்கம்‌ இன்று. இதற்கென தனியாக மக்களின்‌ பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய, தன்னார்வலர்‌ மக்கள்‌ படை ஒன்றை அமைக்கிறோம்‌. ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள்‌ வெளியே வரத்தொடங்கியிருக்கும்‌ நேரத்தில்‌ அவர்களைப் பாதுகாக்காவிட்டால்‌ இந்த தொற்றைத் தடுக்க முடியாது.நோயை முறியடிக்க 60 நாட்கள்‌ வீட்டிலிருந்தது வீண்‌ போய்விடக்கூடாது. ஒருவரை ஒருவர்‌ காப்போம்‌ என்று நாம்‌ தொடங்கினால்‌ எவருமே விடுபட்டுப் போகப்போவதில்லை. மக்களுக்கு இந்த நேரத்தில்‌ தேவைப்படக்கூடிய மருத்துவ. ஆலோசனைகளுக்கும்‌, பாதுகாப்பு உபகரணங்களுக்கும்‌, உணவுப்பொருள்‌ தேவைகளுக்கும்‌ மக்களே தீர்வாகும்‌ இயக்கம்‌ இது. மக்கள்‌ கூடும்‌ இடங்களில்‌ எல்லாம்‌ சானிடைசர்‌ வைக்கப்படுகிறது. நெரிசல்‌ மிகுந்த பகுதிகளில்‌ இயங்கக்கூடிய மக்களுக்கு முகக்கவசங்கள்‌ வழங்கப்படும்‌. இந்த எல்லா உதவிகளையும்‌ செய்ய பல தன்னார்வலர்களின்‌ உதவியும்‌, பங்களிப்பும்‌ தேவை.

மக்கள்  பிரச்சனையை தீர்க்கும் எண் 63698-11111

மக்கள்‌ தங்கள்‌ பிரச்சினைகளைத் தெரிவிக்கவும்‌, அதற்கான தீர்வுகளைத் தேடும்‌ தன்னார்வலராகப் பதிவு செய்யவும்‌, 63698-11111 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம்‌. தன்னார்வலர்கள்‌ எந்தப் பணி வேண்டுமானாலும்‌ செய்யலாம்‌. உதவிக்குப் பொருட்கள்‌ வழங்குவது முதல்‌, உதவிப்பொருட்களைக் கொண்டு சேர்ப்பது வரை, தன்னார்வலர்கள்‌ செய்ய நிறைய பணிகள்‌ இருக்கிறது. ஒரு கஷ்டமான சூழலிலிருந்து இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளும்‌ சக மனிதனுக்கு தீர்வுகளை வழங்கிட, மக்களால்‌ மக்களுக்காக முன்னெடுக்கப்படும்‌ இயக்கம்‌ இது. சென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. நாமே தீர்வு”இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

To Join WhatsApp Group Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here