நாடு திரும்பியோர்க்கு வேலை – மத்திய அரசு புதிய திட்டம்

0

கொரோனா பரவல் காரணமாக, உலகம் முழுவது பெரும் இழப்பை சந்தித்துள்ளது.கொரோனாவால் பல பெரும் நிறுவனங்களை சரிந்தது வெளிநாடுகளில் உள்ள பெரிய பெரிய கம்பெனிகள் பொருளாதாரத்தால் தோல்வியடைந்துள்ளது இதனால் அவர்களது வேலையாட்களை வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.இதனால் வேலைவாய்ப்பு இழந்தவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர்,வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை இழந்த இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தைத் துவக்கியுள்ளது.

ஊரடங்கில் இன்ஸ்டாகிராம் மூலம் ரூ. 3.62 கோடி சம்பாதித்த கோஹ்லி – முதலிடம் யார் தெரியுமா..?

80,000 இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியுள்ளனர்

கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கிய மற்றும் வேலைவாய்ப்புகளை இழந்த இந்தியர்கள், சிறப்பு விமானங்கள் மூலம், தாயகம் திரும்பி வருகின்றனர்.அரபு நாடுகள், ஓமன், சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மட்டும் 80,000 இந்தியர்கள் இதுவரை திரும்பியுள்ளனர்.எண்ணெய்,எரிவாயு,சுற்றுலா,கட்டுமானம்,தானியங்கி, போக்குவரத்து,தகவல் தொழில்நுட்பம்,விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்கள் பணிபுரிந்து வந்தனர். அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பலர் வேலையிழந்து இந்தியா திரும்பியுள்ளனர்.வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் திறன் வாய்ந்த பணியாளர் விவரங்களை வேலைவாய்ப்பு தருவதற்காக ‘ஸ்வதேஸ்’ எனப்படும் திட்டத்தை மத்திய அரசு புதிதாக தொடங்கியுள்ளது. இதற்கான இணையதளம் முகவரியானது www.nsdcindia.org/swades ஆகும்.இணையதளம் வாயிலாக பணி மற்றும் திறன் விவரம்,அனுபவம் போன்றவற்றை இதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று இதுகுறித்த தகவல்களை இந்திய திறன் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மாநில அரசு தொழில் அமைப்புகள் மற்றும் முதலாளிகளிடம் பேச்சுவார்த்தை

மாநில அரசு தொழில் அமைப்புகள் மற்றும் நிறுவனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாடு திரும்பியவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் மூலோபாயக் கட்டமைப்பு ஒன்றுக்கு இந்த அட்டை வழிவகுக்கும். திறன் மேம்பாடு, தொழில் முனைதல் அமைச்சகத்தின் செயல்படுத்தும் பிரிவான தேசிய திறன் வளர்ச்சி நிறுவனம் இந்தத் திட்டத்தின் செயலாக்கத்தை ஆதரிக்கிறது.கூட்டு முயற்சியைப் பற்றி பேசிய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் அமைச்சர், திரு.மகேந்திர நாத் பாண்டே, “இது ஒரு சோதனையான காலம். கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால் உருவாகியுள்ள சவால்களைச் சமாளிக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒட்டு மொத்த நாடும் ஒன்று திரண்டு ஆதரவளிப்பது அவசியம் ஆகும். வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் நாடு திரும்பிய குடிமக்களின் திறன்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து விவரணையாக்கம் செய்ய, விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தோடு இணைவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்னும் கொள்கையால் உந்தப்பட்டு, ஸ்வதேஸ் திறன் அட்டை மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள், குடிமக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி, தேவை-விநியோக இடைவெளியைப் பூர்த்தி செய்யும்” என்றார்

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர். சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பேட்டி

கொரோனா வைரசின் பரவலால் உருவாகியுள்ள வரலாறு காணாத உலகளாவிய அவசர நிலையைக் கருத்தில் கொண்டு 30 மே, 2020 அன்று தொடங்கப்பட்ட ஸ்வதேஸ் திறன் அட்டை (ஆன்லைன்), 3 ஜூன், 2020 (பிற்பகல் 2 மணி) வரை 7000 பதிவுகளைப் பெற்றுள்ளது. இது வரை சேகரிக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து தான் அதிக அளவில் நமது மக்கள் நாடு திரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. திறமைகள் குறித்து சேகரித்துள்ள தகவல்களின் படி, எண்ணெய், எரிவாயு, கட்டுமானம், சுற்றுலா, விருந்தோம்பல், வாகனங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் தான் இவர்களில் பெரும்பாலானோர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்தப் பணியாளர்கள் தான் அதிக அளவில் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

To Join WhatsApp Group Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here