தம் ஆலு – இதை வீட்டுல ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க.! அசந்துருவிங்க.!

0

குவாரன்டைன் டைம்-இல் இந்த ஸ்பெஷல் ரெசிபி-யை (தம் ஆலு ) செய்துபார்க்கலாமே!
தற்போது நாட்டில் லாக்டவுன் நேரத்தில் பெரும்பான்மையான மக்கள் வீட்டில் இருந்தபடியே புதுமையான சில சமையல் ரெஸிபி-யை முயற்சிசெய்து பார்க்கலாம். இவற்றில் ஒன்றுதான் தம் ஆலு/உருளைக்கிழங்கு. இதை ரோட்டி அல்லது நானுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது இந்த கிரேவி மிக அருமையாக இருக்கும். மேலும் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதை ஜீரா ரைஸ் அல்லது புலாவோவுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

வேகவைத்த உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி பொடி2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் 2 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி வெந்தய விதைகள், உப்பு தேவையான அளவு, மஞ்சள், பெருங்காயம், முந்திரி, கருப்பு ஏலக்காய், கருவாப்பட்டை குச்சி, கொத்தமல்லி விதை, சிவப்பு மிளகாய், சீரகம்

செய்முறை

ஒரு மிக்சியில் 2 தக்காளி மற்றும் முந்திரி சேர்த்து ஒரு பேஸ்ட் அரைத்து கொள்ளவும்.பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். சமைக்கும் பொழுது மசாலா உள்ளே இறங்க வேகவைத்த உருளைக்கிழங்கில் ஃபோர்க் வைத்து குத்திவிடம்.

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்கவும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் மசாலா கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

samayam tamil

2 நிமிடம் கழித்து உருளைக்கிழங்கை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் பெருங்காயம், சீரகம், மிளகு, ஏலக்காய் மற்றும் நசுக்கி வைத்துள்ள இஞ்சி பச்சை மிளகாய் பேஸ்டை சேர்த்து வதக்கவும்.

வீட்டுல பால், பிரட் இருக்கா – அப்போ வீட்டுலயே செய்யலாம் Sahi Thukda.!

ஒரு நிமிடம் கழித்து தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். இதை 4-5 நிமிடங்கள் சமைத்த பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் நொறுக்கப்பட்ட கசூரி மேத்தி சேர்த்து தக்காளியின் பச்சை வாசனை நீங்கும் வரை சமைக்கவும். மேலும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

samayam tamil

கிரேவி நன்றாக கொதித்து பச்சை வாசனை போனதும் அதில் சமைத்த உருளைக்கிழங்கை சேர்த்து குறைந்த தீயில் கிளறவும். பிறகு அதில் கரம் மசாலாவை சேர்த்து கிரேவி கெட்டியாகும் வரை சமைக்கவும். இந்த சுவையான தம் ஆலூ கிரேவியை உங்களுக்கு விருப்பமான ரோட்டி அல்லது குல்ச்சாவுடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் ருசியாகவும் புதுமையானதாகவும் இருக்கும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here