முடி வளர்ச்சியை அதிகரிக்கும் உணவு முறைகள் – இதோ உங்களுக்காக!!

0

நமது அழகை பராமரிக்க இயற்கையான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம். என்னதான் நாம் வகை வகையான கிரீம்களை பயன்படுத்தினாலும் அழகு என்பது சில நாட்கள் மட்டும் தான். வயது ஆக ஆக நமது தோல் சுருங்கி வயதானவர் போன்ற தோற்றம் வந்துவிடும். மேலும், பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்து வர கூடிய அளவுக்கு பல பிரச்சனைகளை உருவாக்க வாய்ப்புள்ளது.

இயற்க்கை வழிமுறைகள்:

  • அதிக விலை கொடுத்து கண்ட கண்ட கிரீம்களை வாங்காமல் வீட்டிலேயே இயற்கையாக சோப் மற்றும் குளியல் பவுடர் போன்றவற்றை தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

  • இரும்புச்சத்து அதிகரிக்க பேரீட்ச்சைப்பழம், முருங்கை கீரை போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும்.
  • இரவில் தூங்க செல்வதற்கு முன் பாலில் பாதாம், பணகற்கண்டு, மிளகு, மஞ்சள் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். இதிலுள்ள அனைத்தும் பொருட்களும் முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு உடலிலுள்ள கேட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.

  • காலையில் நெல்லிக்காய், பீட்ரூட், பேரீட்சசைப்பழம், கேரட் ஆகியவற்றை காய்ச்சிய பால் சேர்த்து அரைத்தது குடிக்க வேண்டும். இதில் இரும்பு அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சி இயற்கையாகவே நன்றாக வளரும்.
  • நெல்லிக்காய், வெள்ளரிக்காய், கருவேப்பிலை, மல்லித்தழை, புதினா, இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடல் எடை குறைகிறது.

  • கேரட், இஞ்சி இரண்டையும் அரைத்து லெமன் ஜூஸ் மற்றும் தேன் கலந்து குடித்தால் முகம் மற்றும் உடல் சிவப்பாக மாறுகிறது. முடிவளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
  • வாரம் இரண்டு முறை உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து நன்கு மசாஜ் செய்து ஒரு மணிநேரத்திற்கு பிறகு குளித்தால் உடல் சூடு தணிந்து உடல் அழகு பெறும்.

 

  • இளநீரை முந்தைய நாள் இரவே வெட்டி அதனுள் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு வைத்துவிட்டு மறுநாள் காலை குடித்தால் பருக்கள் மறைந்து முகம் அழகாக இருக்கும்.
  • நம் உணவில் அடிக்கடி புதினா சேர்த்துக்கொள்வது மிக நல்லது. நம்ம எப்பொழுதும் சுறு சுறுப்பாக வைத்துக்கொள்ளும். மேலும், நமது தோள் பளபளப்பாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here