வெண்பா போட்ட விஷ ஊசியால் மயக்கமாகும் கண்ணம்மா – பதட்டமடையும் துளசி!! விறுவிறுப்பான கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா!!

0
barathi kannama

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அடுத்தடுத்து என்ன நடக்கும்?? என்று மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளன. இந்நிலையில் நேற்று டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க கண்ணம்மா பாரதி வீட்டில் போராட்டம் நடத்தினார். அதன் பின் அங்கிருந்து சௌந்தர்யா வீட்டிற்கு வர அதற்கு கண்ணம்மா அங்கிருந்து செல்கிறார். இதனால் கோவமடையும் சௌந்தர்யா பாரதியை கண்டபடி பேசுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி எப்பொழுது டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போகிறார் என்று இது வரையிக்கும் மக்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருந்தனர். அந்த எபிசோடு விரைவாக வரவுள்ளது தெரிகிறது. நேற்றைய எபிசோடில் கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கு வந்து சண்டையிடுகிறார். ஆனால் பாரதியோ வழக்கம் போல் கண்ணம்மாவை இழிவாக பேசி கண்ணம்மாவை வீட்டை விட்டு துரத்துகிறார்.

barathi kannama

ஆனால் கண்ணம்மா உன்னை எப்படி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வைப்பது என்று எனக்கு தெரியும் என்று சவால் விட்டு செல்கிறார். அதன் பின் இன்றைய எபிசோடில் சௌந்தர்யா வேகமாக வீட்டிற்கு வர அங்கு கண்ணம்மா இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பாரதியை கண்டபடி பேசுகிறார்.அங்கு நடந்த அனைத்தையும் பாரதியின் அப்பா கூற சௌந்தர்யா கடுங்கோவம் அடைகிறார்.

barathi kannama

மேலும் அஞ்சலி பாரதிக்கு வக்காலத்து வாங்க அகில் கன்னத்தை சேர்த்து அரை விடுகிறார். அதன் பின் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் கண்ணம்மாவிற்கு மயக்கமாக வருகிறது. எப்படியோ வீட்டிற்கு வந்து சேர்கிறார் கண்ணம்மா. வீட்டிற்கு வந்ததும் கண்ணம்மாவிற்கு அதிகமாக மயக்கம் வருகிறது. அதன் பின் துளசி பதட்டமடைகிறார்.

barathi kannama

பிரசவ நேரத்தில் இப்படி வெளியே போனால் இப்படி தான் ஆகும் என்று துளசி கூறுகிறார். ஆனால் கண்ணம்மாவிற்கு அப்பொழுது தான் நியாபகத்திற்கு வருகிறது வெண்பா விஷ ஊசியை கை வரைக்கும் கொண்டு வந்தது.

barathi kannama

அதன் பிறகு பாரதி நடந்தவற்றை வெண்பாவிடம் போய் சொல்ல வெண்பா டெஸ்ட் எடுக்க விடாமல் என்ன செய்ய முடியுமோ அப்படி பேசி மனதை மாற்றுகிறார். இப்பொழுது வெண்பா போட்ட விஷ ஊசியில் இருந்து கண்ணம்மாவிற்கு என்ன என்ன நடக்க போகிறதோ?? வெண்பா பிடியில் இருந்து கண்ணம்மாவால் தப்ப முடியுமா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here