அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் – மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!!

0

அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் முடிவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து ஆராய அமைக்கப்பட்ட, தமிழக ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழுவும் சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அமைச்சர்கள் கொண்ட குழு

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை இந்தியாவில் உருவாக்க, தகுதி வாய்ந்த பல்கலைக்கழகங்களைத் தேர்வுசெய்து சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்குகிறது. சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கும், சிறப்பு அந்தஸ்து தர முடிவு செய்தது. இதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா ஆதரவாக கடிதம் எழுதினார்.

இது குறித்து ஆராய கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி என ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழு தமிழக உயர்கல்வித் துறையால் அமைக்கப்பட்டது. தற்போது இக்குழு, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில்,’ அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியது போல, பல்கலைக்கழகத்தால் தனியாக நிதி திரட்ட முடியாது. அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here