கடவுளின் அருளை முழுமையாக பெற வேண்டுமா?? வழிபடும் முறைகள்!!

0

ஒவ்வொன்றிற்கும் ஒரு வழிமுறைகள் இருக்கின்றனர். அது போல கோவில்களில் வழிபடுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. நீங்கள் என்னதான் கோவில்களுக்கு சென்று வழிபட்டாலும் எதுவும் நடக்கவில்லையே என்று கவலைபடுகிறீர்களா??  முறைப்படி வழிபட்டால் கடவுளின் முழு அருளை பெற முடியும். முதலில் கடவுள் இருக்கிறார் என்பதை முழுமையாக மனதில் நினைக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை இருப்பவர்களால் மட்டுமே அவர் அருளை உணர முடியும்.

கோவில்களில் வழிபடும் முறை:

கோவில்களுக்கு செல்வதற்கு முன் சுத்தமாக குளித்துவிட்டு சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிற ஆடைகளையே உடுத்த வேண்டும். சில கோவில்களில் வெள்ளை, கருப்பு நிற ஆடைகளை உடுத்துவார்கள். பெண்கள் பொதுவாக வெள்ளி, செவ்வாய் மற்றும் வியாழன் போன்ற நாட்களில் மங்களகரமான ஆடைகளையே பயன்படுத்த வேண்டும்.

கோவிலுக்கு சென்றவுடன் முதலில் கொடிமரம் முன்பு வடக்கு புறமாக பார்த்து நின்றபடி தனது வேண்டுதல்களை கடவுளிடம் மனதார வேண்டிக்கொள்ளவேண்டும். ஆண்கள் சாஷ்டாங்கமாகவும், பெண்கள் தனது மார்பு கீழே படாதவாறும் கீழே விழுந்து வணங்க வேண்டும். பெண்களின் மார்பு தரையிலே பட கூடாது என்று கூறப்படுகிறது.

பின் கோவில்களை இடப்புறமாக சுற்றி வந்து வலபுறமாக கருவறைக்கு செல்லவேண்டும். கடவுளை பார்க்க போகும் போது வெறும் கையோடு செல்லாமல் நம்மால் முடிந்தவரை பூ, நெய், கற்பூரம் போன்ற எதையாவது எடுத்து செல்ல வேண்டும்.

பூஜை முடிந்த பிறகு ஏதாவது தீர்த்தம் கொடுத்தால் குடுத்துவிட்டு மீதம் இருந்தால் தலையில் தேய்க்கலாம். திருநீறு, குங்குமம் கொடுக்கும் பொழுது இரண்டு கைகளாலும் வலது கை மேலே வைத்து வாங்க வேண்டும். அதை இடது கைக்கு மாற்றாமல் பேப்பர் அல்லது பூஜை கூடையில் வைத்துவிட்டு நம் நெற்றியில் பூச வேண்டும். இடது கையில் வைத்து பூச கூடாது.

கோவிலுக்குள் இருக்கும் பொழுது மற்றொருவர் காலில் விழுவது, கை கூப்பி கும்பிடுவது போன்றவற்றை செய்ய கூடாது. பூஜை முடிந்த பின் கோவிலுக்குள் ஒரு இடத்தில் அமர்ந்து கடவுளை நினைத்து ஒரு நிமிடமாவது தியானம் செய்துவிட்டு வெளியே செல்ல வேண்டும். கோவிலுக்கு சென்றால் நேரடியாக வீட்டிற்கு செல்லவேண்டும்.

அப்பொழுதுதான், கடவுளின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும். கோவில்களில் கொடுத்த மலர் அல்லது பழங்களை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுக்க வேண்டும். எலும்பிச்சை பழத்தை பீரோ அல்லது கடைகள் போன்ற வியாபார இடைகளில் வைக்கலாம். முறையாக கடவுளை வழிபட்டால் நாம் நினைத்த காரியம் நிச்சியமாக நிறைவேறும். கடவுள் நமக்கு எப்பொழுது எதை கொடுக்க வேண்டுமோ அதை கண்டிப்பாக கொடுப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here