பீகார் சட்டமன்றத்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு – தேஜஸ்வி யாதவ் தொகுதிக்கும் நடக்கிறது!!

0

பீகார் மாநில சட்டமன்றத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவின் ராக்புர் தொகுதி இடம் பெற்றுள்ளது.

243 தொகுதிகள்

பீகார் மாநிலத்தில் சட்டமன்றத்தேர்தல் நடக்கிறது. ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. எதிரணியில், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ் உள்ளட்ட கட்சிகள் களம் காண்கின்றன. மீண்டும் ஜனதா தள ஆட்சியை அமைக்க, நிதிஷ் குமார் களத்தில் குதித்துள்ளார்.

243 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மூன்று கட்டமாக நடந்து வருகிறது. கடந்த அக்டோபர் 28ம் தேதி, முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்டம் நடந்து வருகிறது. இதில், மொத்தம் 17 மாவட்டங்களை கொண்ட 94 தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் (ராக்புர் ) , இவரது சகோதரர் தேஜ் (ஹசன்புர் ) உள்ளட்ட வி.ஐ.பி., தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

1463 வேட்பாளர்கள்

இரண்டாம் கட்டத்தில், மொத்தம் 2 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரத்து 285 பேர் வாக்காளர்கள் உள்ளனர்.இதில் ஆண்கள் 1 கோடியே 50 லட்சத்து 33 ஆயிரத்து 34 பேரும் ,பெண்கள் 1 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர் உள்ளனர். திருநங்கைகள் 980 உள்ளனர். மொத்த தேர்தல் களத்தில் 1463 வேட்பாளர்கள் உள்ளனர் அதில் பெண்கள் 146 பேரும் ,ஆண்கள் 1316 பேரும் போட்டியிடுகின்றனர். மகராஜ்கஞ்ச் தொகுதியில் அதிக பட்சமாக 27 வேட்பாளரும் ,குறைந்த பட்சமாக தராலி தொகுதியில் 4 வேட்பாளரும் போட்டியிடுகின்றனர். இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் நவம்பர் 7 ஆம் தேதி நடைபெரும் .நவ., 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here