தலப்பாகட்டி ஸ்டைலில் ‘சிக்கன் பிரியாணி’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0

தலப்பாகட்டி பிரியாணி என்றாலே அது தனி ஸ்பெஷல் தான். இந்த காலத்தில் பிரியாணிக்கு அடிமையாகாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை இருக்கும். மேலும் தலப்பாகட்டி பிரியாணியின் செய்முறை பலருக்கும் தெரிவதில்லை. இப்பொழுது தலப்பாகட்டி ஸ்டைலில் சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

பாசுமதி அரிசி – 2 கப்

வெங்காயம் – 1 நறுக்கியது

பச்சை மிளகாய் – 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – 1/2 கப்

புதினா – 1/2 கப்

கெட்டியான தேங்காய் பால் – 1 கப்

தண்ணீர் – 2 கப்

உப்பு – தேவையான அளவு

புளிக்காத தயிர் – 1 கப்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சோம்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்

பட்டை – 2 துண்டு

ஏலக்காய் – 4

அன்னாசி – 1

கிராம்பு – 4

செய்முறை:

முதலில் சிக்கனை நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தயிர், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் பிரியாணி மசாலா செய்வதற்கு சோம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசி, கிராம்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

vegetable biriyani
vegetable biriyani

பின்பு பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். பின் ஊற வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வரை பிரட்டி விட்டு, 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவேண்டும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பின்னர் குக்கரில், கடாயில் உள்ள சிக்கனுடன் கூடிய மசாலாவை சேர்த்துகொள்ள வேண்டும். பின் அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அதையும் குக்கரில் சேர்த்து கொள்ளவேண்டும்.

அடுத்து அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி, புதினா, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொதிக்கவிட வேண்டும். பின்பு 3 விசில் வரும் வரை காத்திருக்கவும் விசில் போனதும் குக்கரைத் திறந்தால், மணக்க மணக்க சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here