காரசாரமான ‘சிக்கன் சுக்கா’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
chicken ghee roast
chicken ghee roast

சிக்கனில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. சிக்கனை நாம் சமைக்கும் முறை பொறுத்தே அதன் நன்மை, தீமை அமைந்துள்ளது. சிக்கனில் அதிகம் புரத சத்துக்கள் உள்ளதால் தசைகளை வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் கண்புரை பிரச்சனைகளையும் குணமாக்குகிறது. இப்பொழுது இந்த சிக்கனை வைத்து சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

punjabi chicken ingredients

சிக்கன் – 1/2 கி

பச்சைமிளகாய் – 4

வெங்காயம் – 2

கருவேப்பிலை

மஞ்சள்தூள்

மிளகாய்த்தூள்

தக்காளி – 2

மிளகுத்தூள்

இஞ்சிபூண்டு விழுது

கரம் மசாலா

செய்முறை

முதலில் சிக்கனை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவிக்கொள்ளவும். இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். இப்பொழுது சிக்கனை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

chicken roast

அதன் பின் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சிக்கன் உடன் சேரும் படி வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். இப்பொழுது தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிக்கன் சுக்கா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here