‘கிங்’ கோஹ்லிக்கு பிறந்த நாள்- ‘டுவிட்டரில்’ குவியும் வாழ்த்துகள்!!

0

கிரிக்கெட்டின் மூன்றுவிதமான போட்டியிலும் ‘கிங்’ ஆக வலம் வரும், இந்திய கேப்டன் கோஹ்லிக்கு இன்று பிறந்த நாள். இவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

தரவரிசையில் முதலிடம்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி. இதுவரை 86 டெஸ்ட் (7240 ரன்), 248 ஒரு நாள் (11867), 82 ‘டுவென்டி -20’ போட்டிகளில் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்திலும் (871 புள்ளி ), டெஸ்ட் போட்டியில் 2வது இடத்திலும் (886 புள்ளி ) உள்ளார். ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணியை வழி நடத்துகிறார். இந்நிலையில், இன்று (நவம்பர் 5 ) கோஹ்லிக்கு 32வது பிறந்த நாள். இதற்கு, ‘டுவிட்டரில்’ வாழ்த்துகள் குவிகின்றன.

தலைவருக்கு வாழ்த்துகள்

 

பெங்களூரு அணி வெளியிட்ட செய்தியில்,’ எங்களின் தலைவர், ஜாம்பவான் விராத் கோஹ்லிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் வீரர் லட்சுமண்: பிறந்த நாள் வாழ்த்துகள் கோஹ்லி. இன்னும் வெற்றியும், மகிழ்ச்சியும் அதிகரிக்க வாழ்த்துகள்.
இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி: உடற்தகுதியில் சிறப்பாகவும், இளம் வயதில் எண்ணற்ற உச்சத்தையும் எட்டியுள்ள கோஹ்லிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
இந்திய வீரர்களான ரெய்னா, சகா உள்ளிட்டோரும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here