ஜூஸியான “கிரில் சிக்கன்” ரெஸிபி – வீட்லயே செய்யலாம் வாங்க!!

0

சின்ன குழந்தைல இருந்து பெரியவங்க வரைக்கும் கிரில் சிக்கன் னு பேரை சொன்னாலே குஷி ஆயிடுவாங்க. காரணம் என்னதுன்னு பார்த்தோம்னா… அதன்நிறம் மற்றும் மற்றும் ஜூஸியான சுவை தாங்க. எல்லாருக்கும் பிடிச்ச இந்த உணவை ரெஸ்ட்டாரெண்ட் போன மட்டும் தாங்க சுவைக்க முடியும். இப்போ உள்ள விலை ஏற்றத்துல குடும்பத்துல இருக்குற எல்லாரும் ஹோட்டல் போய் சாப்பிடுவது என்பது கட்டுப்படியாகாது. அப்பறோம் எப்படி கிரில் சிக்கன் சாப்பிடுறதுன்னு கேக்குறீங்களா.கவலைய விடுங்க ரொம்ப ஈஸியா, அதே நேரம் ரொம்ப சுவையான “கிரில் சிக்கன்” வீட்லயே எப்படி சமைக்குறதுனு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 500 gm
தயிர் – 100ml கெட்டியானது
இஞ்சி,பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

சிக்கனை பெரிய பெரிய துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். அதை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி கொள்ள வேண்டும். சிக்கன் துண்டுகளில் நடு நடுவே கீறி வீட்டுக் கொள்ள வேண்டும். அப்போது தான் மசாலா எல்லா இடங்களிலும் பரவி நன்றாக இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு அகன்ற பாத்திரத்தில் கெட்டியான தயிர், இஞ்சி,பூண்டு விழுது, எலுமிச்சை, உப்பு, கரம் மசாலா, சோயாசாஸ், மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள்,மிளகுத்தூள், 2 டேபிள் ஸ்பூன் இவற்றை எல்லாம் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையில் சிக்கன் துண்டுகளை சேர்த்து எல்லா இடங்களிலும் மசாலா நன்கு படும் படி தடவ வேண்டும்.

இப்பொழுது சிக்கன் துண்டுகளை 3 மணி நேரம் அல்லது ஒரு முழு இரவு வரை ஊற விட வேண்டும். அப்பொழுது தான் மிகவும் சுவையாக இருக்கும். பிறகு, ஒரு கிரில் பேனில் சிறிது எண்ணெய் தடவி சிக்கன் துண்டுகளை வேக விட வேண்டும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேக விட வேண்டும்.

“கொங்கு நாட்டு கோழி குழம்பு” ரெஸிபி!!

இப்பொழுது வீட்டிலேயே செய்த சுவையான “கிரில் சிக்கன்” தயார். பரிமாறும் போது தக்காளி சாஸ், புதினா சட்னி வைத்து பரிமாறினாள் கூடுதல் சுவை கிடைக்கும். சிக்கனில் அதிக அளவு ப்ரோடீன் மற்றும் இரும்புசத்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here