“கொங்கு நாட்டு கோழி குழம்பு” ரெஸிபி – சமைக்காலம் வாங்க!!

0

நம்ம சாப்பிடுற சாப்பாட தினமும் ஒரே சுவைல சாப்பிட்டா நமக்கு அது ரொம்ப சலிப்பா ஆயிரும். அப்பப்போ விதவிதமான சுவையில் சாப்பிடும் போது நமக்கு சாப்பிடுவதற்கு ஆசையை ஏற்படுத்தும். அந்த வகையில் கொங்குநாடு பாணில சுவையான நாட்டு கோழி குழம்பு எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி – 1/2 kg
நல்லெண்ணைய் – 1/2 கப்
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
சோம்பு – 1 டீ ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்:

சோம்பு – 1 டீ ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 3

மசாலா அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 10
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
சோம்பு – 1 டீ ஸ்பூன்
கசகசா -1/2 டீ ஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
தனியா  – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் நாட்டுக்கோழியை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி அதில் இஞ்சி,பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் மசாலா அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக சேர்த்து வறுக்க வேண்டும். இதை தனியே ஆற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!


முதலில்  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில், சோம்பு, பாட்டை,கிராம்பு, ஏலக்காய் இவற்றை தாளித்து பிறகு, அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை  சேர்த்து நன்கு    மிருதுவாகும் வரை வதக்க வேண்டும். பின்னர் அதில், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.  இப்பொழுது  வைத்திருக்கும் கோழியை சேர்த்து ஒரு 5 நிமிடம் எண்ணையிலேயே வதக்க வேண்டும்.

இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து வதக்க வேண்டும்.  பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 30 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியில் மல்லித்தழை சேர்த்து இறக்க வேண்டும். இப்பொழுது சுவையான “கொங்கு நாட்டு கோழி குழம்பு” தயார்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here