‘கேரட் பாயசம்’ – எப்படி செய்றதுன்னு பாப்போம்..!

0
carrot paayasam
carrot paayasam

தேவையான பொருட்கள்

carrot paayasam ingredientsscarrot paayasam ingredientss
carrot paayasam ingredientss

துருவிய கேரட் – 1 கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 5-6, உலர் திராட்சை – 5-6, பால் – 1/2 லிட்டர், சர்க்கரை – 1/2 கப், கேசரி பவுடர் – 1 சிட்டிகை, ஏலக்காய் – 4

செய்முறை

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் அதில் கேரட்டைப் போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்கி, பின் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

carrot payasam
carrot payasam

பாலானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைவில் வைத்து, 15 நிமிடம் கேரட்டை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும். கேரட் நன்கு மென்மையாக வெந்ததும், அதில் கேசரி பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கிளறி, அடுப்பை அணைத்து, பின் தட்டிய ஏலக்காயை சேர்த்தால், கேரட் பாயாசம் ரெடி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here