அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 22 முதல் இலவச பாட புத்தகங்கள் – விரைவில் பள்ளிகள் திறப்பு…!

0
school books free
school books free

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு இருக்கும் நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன இந்தநிலையில் மாணவர்கள் நலன் கருதி தேர்வுகளை கல்வி நிறுவனங்கள் தள்ளிவைத்து. மேலும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை வழங்க போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு எங்களுக்கு இனி தேவை இல்லை – மாநில முதல்வர் பேட்டி…!

1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள்

school books free
school books free

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை தமிழக அரசு ரத்து செய்தது ஆனால் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது மட்டும் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.அதே சமயம், இந்த பாடப் புத்தகங்களை கிடங்குகளில் இருந்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வரும் 22-ந் தேதி முதல் எடுத்துச் சென்று வினியோகம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர், வரும் 30-ந் தேதிக்குள் பணிகளை முடிக்க கோரியுள்ளார். தமிழகம் முழுவதும் மொத்தம் 2 கோடிக்கும் அதிகமான பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு சீக்கிரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் விரைவில் அது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here