டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய வேண்டும்.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய வேண்டும்.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய வேண்டும்.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை, கெஜ்ரிவால் தரப்பினர் தாக்கல் செய்து இருந்தனர். அதனை விசாரணை செய்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில்  இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனு டெல்லி CBI சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் ஜாமீன் மனு ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தது. தற்போது ஜாமீன் மனு நீட்டிக்கப்பட்டுள்ளதால்  உச்சநீதிமன்ற உத்தரவின் படி நாளை கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here