தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா?? வெளியான முக்கிய அப்டேட்!!

0
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6ம் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்து இருந்தனர். ஆனால் நேற்று (மே 31) தமிழக அரசு ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
இது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ்நாட்டில் கடந்த 2 வார காலமாக கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த கோடை வெயிலின் தீவிரத்தை உணர்ந்து வரும் ஜூன் 3 வது வாரத்திற்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் மற்றும் வல்லுநர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் இதை அரசு பரிசீலனை செய்து முக்கிய முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here