ஊரடங்கு எங்களுக்கு இனி தேவை இல்லை – மாநில முதல்வர் பேட்டி…!

0
no lockdown
no lockdown

கொரோனா தாக்கம் இன்னும் குறையாமல் தான் இருக்கிறது.எனவே நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பயிருக்கும் நிலையில்  இனி ஊரடங்கு தேவை இல்லை கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு இனி ஊரடங்கு தேவையில்லை

yeddiyurappa
yeddiyurappa

கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா பெங்ளூரில் உள்ள சங்கர மடத்துக்கு சாமி தர்சனம் செய்ய வந்தார்.பின் சாமி தரிசனம் முடிந்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்த எடியூரப்பா கொரோனா பிரச்சினையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.கொரோனா தொற்று பரவலை தடுக்க கர்நாடக  மாநில அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கடுமையான முறையில் எடுத்து வருகிறது.மேலும் கர்நாடக அரசின் நிதி நிலை மோசமாக இருந்த நிலையிலும் ரூ.1,000 கோடி விடுவித்துள்ளேன். விவசாயிகள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரதமர் சம்மான் திட்டத்தின் கீழ் 50 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 உதவித்தொகையை வழங்கியுள்ளேன் கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். பிரதமருடன் வீடியோ கான்பரன்ஸின் மூலம் உரையாடுகையில் ஊரடங்கை மேலும் தளர்த்துமாறு கேட்க போகிறேன்.கர்நாடகவிற்க்கு ஊரடங்கு இனி தேவை இல்லை.பொதுமக்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் அவர்களது இயல்பு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். கர்நாடகாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. மேலும் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here